திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (70). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பிள்ளைகளுக்கு திருமணமானதால் தனியாக வசித்து வந்தார். சம்பவ தினம் திருவட்டார் பகுதியில் பொருள்கள் வாங்க கடைக்குச் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று வேதமாணிக்கம் உயிரிழந்தார். திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.