கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் நேற்று அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கொல்லங்கோடு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடம் சென்ற போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட பின்குளம் என்ற பகுதியை சேர்ந்த சந்திரன் (65) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவற்றை போலீஸ் நிலையம் கொண்டு வந்து, மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.