திங்கள்நகர் பகுதியில் ரூ.1.15 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று (04.07.2025) தமிழக முதல்வர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா குத்துவிளக்கேற்றினார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை மரு. முகமது கான் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.