தக்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ் குமார் (40 ) பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் தனது பைக்கில் தக்கலை தாலுகா அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மினி டெம்போ ஒன்று அனீஸ் குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரி அனிதா ராணி அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர். டெம்போ டிரைவர் சந்தோஷ் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.