தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதி சேர்ந்தவர் சண்முகம் பிள்ளை மகள் ஷைனி பிரியா (30). இவர் கோவையில் உள்ள டைட்டல் பார்க்கில் பணியாற்றி வருகிறார். ஷைனி பிரியாவுக்கும் ஒரு வாலிபருக்கும் நாளை மறுநாள் திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. நேற்று வீட்டில் இருந்த ஷைனி பிரியா திடீரென மாயமானார். அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது சகோதரர் சஞ்சீவ் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.