நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் கேதரின் கீதா (47). இவர் தனது நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் உடல்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்து, சூரியகோடு பகுதியில் 2 செந்து இடத்தை வாங்கி, நேற்று 3 உடல்களையும் தோண்டி எடுத்து புதிதாக வாங்கிய இடத்தில் கொண்டு சென்றார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று 5-ம் தேதி காலை குழித்துறை நகராட்சி தகன மேடையில் எரியூட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.