விஜய் ஆட்சியில் ஸ்ட்ரிக்ட்.. கலகலகத்த கன்னியாகுமரி! தமிழக ஓட்டுனர்களை விரட்டியடித்த கேரள போலீஸ்!

0
52

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தின் போது, கேரள போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்ததுடன், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக செய்தியாளர்களையும் தள்ளி ஒருமையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை ஏற்றிச் செல்ல கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தடை அமலில் உள்ளது. இந்த தடையால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை ஏற்றிச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை அருகே இஞ்சிவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தனர். இதையடுத்து, இஞ்சிவிளை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை வெளியே எடுக்க முயன்றபோது, தமிழக மற்றும் கேரள போலீசார் இணைந்து லாரிகளை தடுத்து நிறுத்தினர்.

இதனால் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கேரள போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கேரள போலீசார், போராட்டக்காரர்களை அங்கிருந்து விலகுமாறு கூறி துரத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சம்பவத்தை படம் பிடித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தமிழக செய்தியாளர்களையும் கேரள போலீசார் தள்ளியதுடன், ஒருமையில் பேசி அவமரியாதையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here