கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பழுதடைந்த கலையரங்கம் அகற்றம்

0
26
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் முகப்பில் பழுதடைந்த கலையரங்கம் இடித்து அகற்றப்பட்ட காட்சி
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆபத்தான நிலையில் இருந்த கலையரங்கம் இடித்து அகற்றப்பட்டது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பழுதடைந்திருந்த கலையரங்கம் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

இக்கோயில் திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் முகப்பு பகுதியில் கலையரங்கம் கட்டப்பட்டது. அந்தக் கலையரங்க கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குள் மழைநீா் மற்றும் கழிவுநீா் புகுந்ததை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், ஆபத்தான நிலையில் உள்ள கலையரங்கத்தை இடித்து அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதன்படி, அந்தக் கலையரங்கம் இடித்து அகற்றப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here