கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவர் ரப்பர் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வாங்கிய உலராத பச்சை ரப்பர் ஷீட்டுகளை தனது வீட்டின் கார் ஷெட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று பஷீர் உலராத பச்சை ரப்பர் ஷீட்டை புகையறையில் வைத்து உலர்த்துவதற்காக எடுக்கச் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த 400 கிலோ ரப்பர் ஷீட்டுகளைக் காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பஷீர் கடையாலுமூடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.