தக்கலை தேசிய நெடுஞ்சாலையோரம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலைய பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றப்பட்டு, ரூ. 6.39 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மனோ தங்கராஜ் எம்எல்ஏ நேற்று பார்வையிட்டார். அப்போது கட்டுமானத்தின் தரத்தை ஆய்வு செய்தவர் அதிருப்தியடைந்தார். கட்டுமானப் பணிகளை தரமான முறையில் நேர்த்தியாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகராட்சி தலைவர் அருள் ஷோபன், நகர திமுக செயலாளர் சுபி ஹான், கவுன்சிலர் கீதா, திமுக நிர்வாகிகள் அனீஸ், பிரதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.