எச்ஐவி பாதித்த பெண் பலருக்கு காதல் வலை வீசி பணம் பறிப்பு: பாதிக்கப்பட்டவர்களை தேடுகிறது போலீஸ்

0
23

மத்​தி​யப் பிரதேசம் பிந்த் மாவட்​டத்தை சேர்ந்த பெண் ஒருவர் எச்ஐவி பாதிப்​புக்கு கடந்த 3 ஆண்​டு​களாக சிகிச்சை பெற்று வரு​கிறார். இவர் சமீபத்​தில் 60 வயது விவ​சாயி ஒரு​வரிடம் அவரது வாக​னத்​தில் லிப்ட் கேட்​டுள்​ளார். தனக்கு கால் வலி இருப்ப​தாக அவர் கூறிய​தால், அவர் மீது இரக்​கப்​பட்ட முதி​ய​வர் அவரை தனது வாக​னத்​தில் அழைத்​துச் சென்று வீட்​டில் இறக்கிவிட்​டுள்​ளார். அப்​போது அந்​தப் பெண் தேநீர் சாப்​பிட தனது வீட்டுக்கு விவ​சா​யியை அழைத்​தார்.

அங்கு அவரை உல்​லாசத்​துக்கு அழைத்து அதை வீடியோ​வில் ரகசி​ய​மாக பதிவு செய்​தார். சிறிது நேரத்​தில் ஒரு கும்​பல் முதியவரை சுற்றி வளைத்து ரூ.7 லட்​சம் பணம் கேட்டு மிரட்​டியது. சமூக அவமானத்​துக்கு பயந்து அவர் முதலில் ரூ.5,000-ஐ முன்பணமாக கொடுத்​தார். அதன்​பின் தனது நிலத்தை விற்று பணம் கொடுக்க முயன்​றார். இந்த கும்​பலின் தொந்​தரவு அதிகமான​தால், போலீ​ஸில் இச்​சம்​பவம் குறித்து விவ​சாயி புகார் அளித்​தார்.

இதையடுத்து மோசடி கும்​பலை போலீ​ஸார் கைது செய்து விசாரித்​தனர். மருத்​துவ பரிசோதனை​யில் அந்​தப் பெண்​ணுக்கு எச்​ஐவி பாதிப்பு இருந்​தது தெரிய​வந்​தது. அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ஒரு லேப்​டாப் கைப்​பற்​றப்​பட்​டது. அதில் மோசடியில் சிக்​கிய 16 நபர்​கள் எச்​ஐவி பாதிப்பு பெண்​ணுடன் உல்​லாச​மாக இருக்​கும் வீடியோக்​கள் இருந்​தன.

இந்​தப் பெண் மூலம் அவர்​களுக்கு எச்​ஐவி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்​தேகம் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் அந்த வீடியோ​வில் உள்ள நபர்​களை கண்​டு​பிடித்து மருத்​துவப் பரிசோதனைக்கு அனுப்​பும் முயற்​சி​யில் போலீ​ஸார் இறங்கியுள்ளனர். எச்​ஐவி பாதிப்பு பெண் ஒரு​வர் பலருக்கு காதல் வலை வீசி பணம் பறித்து வந்த சம்​பவம் மத்​தி​யப் பிரதேசத்​தின் பிந்த் மாவட்​டத்​தில் சுகா​தார அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

நாட்​டில் தற்​போது 25 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோர், எச்​ஐவி பாதிப்​புக்கு சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ஒவ்​வொரு ஆண்​டும் புதி​தாக 66,400 பேருக்கு எச்​ஐவி பாதிப்பு ஏற்​படு​கிறது. 16 லட்சத்துக்​கும் அதி​க​மானோர் வாழ்​நாள் முழு​வதும் சிகிச்சை பெறும் நபர்​களாக உள்​ளனர். இந்​நிலை​யில் எச்​ஐவி பா​திப்பு பெண் ஒரு​வர் பணம் பறிக்​கும் செயலில் ஈடு​பட்டு எச்​ஐவி தொற்றை பரப்பி வரும்​ சம்​பவம்​ அதிர்ச்​சி​யை ஏற்​படு​த்​தி​யுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here