ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ஆர்சிபி – இறுதியில் குஜராத் அணியை வீழ்த்தியது எப்படி?

0
26

ஐபிஎல் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜராத் டைட்டன்ஸ் அணி​யுடன் மோதி​யது. டாஸ் வென்ற ஆர்​சிபி அணியின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதலில் பேட் செய்த குஜ​ராத் அணிக்கு தொடக்​கம் அதிர்ச்​சி​யாக இருந்​தது.

ஜேக்​கப் டஃபி வீசிய முதல் ஓவரில் சாய் சுதர்​சன் 2 பவுண்​டரி​கள் அடித்​தார். புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் ஷுப்​மன் கில் பவுண்​டரி ஒன்றை அடித்​தார். ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய ஷுப்​மன் கில் அடுத்த பந்தை விளாச முயன்ற போது மிட் ஆஃப் திசை​யில் நின்ற ரஜத் பட்​டி​தா​ரிடம் கேட்ச் ஆனது.

10 பந்​துகளை சந்​தித்த ஷுப்​மன் கில் 2 பவுண்​டரி​களு​டன் 10 ரன்கள் சேர்த்​தார். இதையடுத்து நிஷாந்த் சிந்து களமிறங்​கி​னார். நிதான​மாக விளை​யாடிய சாய் சுதர்​சன் 12 பந்​துகளில், 2 பவுண்டரி​களு​டன் 12 ரன்​கள் எடுத்த நிலை​யில் புவனேஷ்வர் குமார் வீசிய பவுன்​சரை விளாச முயன்ற போது விக்​கெட் கீப்பரின் வலதுபுறம் உயர​மாக சென்​றது. இதை ஜிதேஷ் சர்மா மின்​னல் வேகத்​தில் ஓடிச் சென்று கேட்ச் செய்​தார். 26 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய ஜாஸ் பட்​லர் நிதான​மாக பேட் செய்​தார்.

ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய 5-வது ஓவரில் நிஷாந்த் சிந்து தொடர்ச்சி​யாக 2 பவுண்​டரி​கள் விரட்​டி​னார். பவர்​பிளே​வில் குஜராத் அணி 45 ரன்​கள் எடுத்​தது. சீராக ரன்​கள் சேர்த்து வந்த நிஷாந்த் சிந்து 18 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 20 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரஷிக் சலாம் வீசிய பந்தை லாங் ஆன் திசையில் விளாசிய போது எல்​லைக் கோட்​டுக்கு அருகே தேவ்​தத் படிக்​கலிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து வாஷிங்​டன் சுந்​தர் களமிறங்​கி​னார்.

10 ஓவர்​களில் குஜ​ராத் அணி 63 ரன்​கள் எடுத்​தது. ஜாஸ் பட்​லர் 23 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் கிருணல் பாண்​டியா பந்​தில் ஸ்டெம்​பிங்க் ஆனார். இதையடுத்து களமிறங்​கிய அர்​ஷத் கான், கிருணல் பாண்​டியா வீசிய பந்தை மிட் விக்​கெட் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். ஜேக்​கப் டஃபி வீசிய 14-வது ஓவரில் வாஷிங்​டன் சுந்​தர் தொடர்ச்​சி​யாக 2 பவுண்டரிகளை விரட்ட 4-வது பந்தை அர்​ஷத் கான் சிக்​ஸருக்கு பறக்கவிட்டார்.

இந்த ஓவரில் மட்​டும் 16 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. அதிரடி​யாக விளை​யாட முயன்ற அர்​ஷத் கான், ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய பந்தில் ஃபைன் லெக் திசை​யில் நின்ற ரஷிக் சலாமிடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார். அர்​ஷத் கான் 6 பந்​துகளில், 2 சிக்ஸர்களு​டன் 15 ரன்​கள் சேர்த்​தார். இதையடுத்து ராகுல் டெவாட்​டியா களமிறங்​கி​னார். 14.2 ஓவரில் குஜ​ராத் அணி 100 ரன்களை எட்​டியது. ரஷிக் சலாம் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ராகுல் டெவாட்​டி​யா, ரஜத் பட்​டி​தா​ரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

டெவாட்​டியா 5 பந்​துகளில், 7 ரன்​கள் சேர்த்​தார். இதன் பின்​னர் களமிறங்​கிய ஜேசன் ஹோல்​டர் 7 ரன்​களில் புவனேஷ்வர் குமார் பந்​தி​லும், ரஷித் கான் 7 ரன்​களில் ரஷிக் சலாம் பந்​தி​லும் நடையை கட்​டினர். சீராக ரன்​கள் சேர்த்த வாஷிங்​டன் சுந்​தர் 37 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார். 20 ஓவர்கள் முடி​வில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 155 ரன்​கள் எடுத்​தது. வாஷிங்​டன் சுந்​தர் 50, காகிசோ ரபாடா 3 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஆர்​சிபி அணி தரப்​பில் ரஷிக் சலாம் 4 ஓவர்​களை வீசி 27 ரன்​களை மட்டும் வழங்கி 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும், கிருணல் பாண்​டியா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்பற்​றினர். இதையடுத்து 156 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி அணிக்கு வெங்​கடேஷ் ஐயர், விராட் கோலி ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. காகிசோ ராபடா வீசிய 2-வது ஓவரில் 3 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸர் விளாசி மிரட்​டி​னார் வெங்​கடேஷ் ஐயர். முகமது சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் விராட் கோலி 2 பவுண்டரி​களும், வெங்​கடேஷ் ஐயர் ஒரு பவுண்​டரி​யும் விரட்​டினர்.

ரபாடா வீசிய 4-வது ஓவரை விராட் கோலி பதம் பார்த்​தார். இந்த ஓவரில் விராட் கோலி 3 பவுண்​டரி​களும், ஒரு சிக்​ஸரும் விளாசினார். முகமது சிராஜ் வீசிய 4-வது ஓவரின் 2-வது பந்தை சிக்​ஸருக்கு விளாசிய வெங்​கடேஷ் ஐயர் அடுத்த பந்தை மிட் ஆன் திசை​யில் விளாச முயன்ற போது ரபா​டா​விடம் கேட்ச் ஆனது. 16 பந்​துகளை சந்​தித்த வெங்​கடேஷ் ஐயர் 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்டரிகளு​டன் 32 ரன்​கள் விளாசி​னார்.

இதையடுத்து களமிறங்​கிய தேவ்​தத் படிக்​கல் ஒரு ரன் எடுத்த நிலை​யில் ரபாடா பந்தை தேர்​டுமேன் திசை​யில் விளாசிய போது அர்​ஷத் கானிடம் கேட்ச் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்​கிய ரஜத் பட்​டி​தார் களமிறங்​கி​னார். பவர் பிளே​வில் ஆர்​சிபி அணி 70 ரன்​கள் குவித்​தது. முகமது சிராஜ் வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தை ரஜத் பட்​டி​தார் டீப் பேக்​வேர்டு ஸ்கொயர் லெக் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார்.

9-வது ஓவரை வீசிய ரஷித் கான் 2 விக்​கெட்​களை வீழ்த்தி திருப்பு முனையை ஏற்​படுத்​தி​னார். ரஜத் பட்​டி​தார் 13 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 15 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரஷித் கான் பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆன் திசையில் ரபா​டா​விடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய கிருணல் பாண்​டியா ஒரு ரன் எடுத்த நிலை​யில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்து வெளி​யேறி​னார். இதன் பின்னர் டிம் டேவிட் களமிறங்​கி​னார். ஜேசன் ஹோல்​டர் வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்​டரி​கள் விளாசப்​பட்​டது.

10 ஓவர்​களில் ஆர்​சிபி அணி 100 ரன்​களை குவித்​தது. அதிரடி​யாக விளை​யாடிய விராட் கோலி 25 பந்​துகளில், 7 பவுண்​டரி​கள், 2 சிக்ஸர்​களு​டன் அரை சதம் கடந்​தார். ரஷித் கான் வீசிய 13-வது ஓவரின் 3-வது பந்தை டிம் டேவிட் லாங் ஆன் திசை​யில் சிக்ஸருக்கு விளாசி​னார். சீராக ரன்​கள் சேர்த்த டிம் டேவிட் 17 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​கள் எடுத்த நிலை​யில் அர்​ஷத் கான் பந்​தில் ஜாஸ் பட்​லரிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இதையடுத்து ஜிதேஷ் சர்மா களமிறங்​கி​னார்.

அர்​ஷத் கான் வீசிய 18-வது ஓவரின் 5-வது பந்தை பவுண்​டரிக்​கும், கடைசி பந்தை சிக்​ஸருக்​கும் விராட் கோலி விளாச ஆர்​சிபி அணி 18 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 161 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. விராட் கோலி 42 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 9 பவுண்டரி​களு​டன் 75 ரன்​களும், ஜிதேஷ் சர்மா 14 பந்​துகளில், 11 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆர்​சிபி அணி சாம்பியன் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்​டது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்​றில் சாம்​பியன் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்ட 3-வது அணி என்ற பெரு​மையை ஆர்​சிபி அணி பெற்றது. இதற்கு முன்​னர் சிஎஸ்கே அணி 2010, 2011-ம் ஆண்டுகளி​லும், மும்பை இந்​தி​யன்​ஸ் அணி 2019, 2020-ம் ஆண்டுகளி​லும் தொடர்ச்​சி​யாக கோப்​பையை வென்​று சாம்பியன்​ பட்​டத்​தை தக்​க​வைத்​திருந்​தன. சாம்​பியன்​ பட்​டம்​ வென்​ற ஆர்​சிபி அணிக்​கு ரூ.20 கோடி பரிசு வழங்கப்​பட்​டது.

ரன் வேட்டை டாப் 5

வைபவ் சூர்யவன்ஷி – 776 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

ஷுப்மன் கில் – 732 (குஜராத் டைட்டன்ஸ்)

சாய் சுதர்சன் – 722 (குஜராத் டைட்டன்ஸ்)

விராட் கோலி – 675 (ஆர்சிபி)

ஹென்ரிச் கிளாசன் – 624 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

சிறந்த ரன் குவிப்பு

கே.எல்.ராகுல் – 152* (டெல்லி கேப்பிடல்ஸ்)

அபிஷேக் சர்மா – 135* (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

ரியான் ரிக்கெல்டன் – 123* (மும்பை இந்தியன்ஸ்)

சஞ்சு சாம்சன் – 115* (சிஎஸ்கே)

குயிண்டன் டி காக் – 112*(மும்பை இந்தியன்ஸ்)

சிறந்த பந்துவீச்சு

மோஷின் கான் 23/5 (லக்னோ)

ஜோஷ் ஹேசில்வுட் 12/4 (ஆர்சிபி)

அகீல் ஹோசைன் 17/4 (சிஎஸ்கே)

ஜேமி ஓவர்டன் 18/4 (சிஎஸ்கே)

புவனேஷ்வர் குமார் 23/4 (ஆர்சிபி)

விக்கெட் வேட்டை டாப் 5

காகிசோ ரபாடா 29 (குஜராத் டைட்டன்ஸ்)

புவனேஷ்வர் குமார் 28 (ஆர்சிபி)

ஜோப்ரா ஆர்ச்சர் 25 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

ரஷித்கான் 21 (குஜராத் டைட்டன்ஸ்)

அன்ஷுல் கம்போஜ் 21 (சிஎஸ்கே)

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here