சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘நூறு சாமி’. சுவாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் என பலர் நடித்திருக்கும் இப்படம் உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளது. படத்தின் டீஸர் கடந்த ஏப்ரலில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் அப்போது வெளியாகவில்லை. இந்நிலையில் புது ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 19ம் தேதி இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.















