அழகியபாண்டியபுரம் அருகே குறத்தியறையை சேர்ந்தவர் அமுதா, 53. இவர் வேலைக்குச் செல்வதற்காக மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் வந்து இறங்கும்போது அவரிடமிருந்து மணி பர்ஸை மேலப்பாளையத்தை சேர்ந்த 19 வயது பெண் திருடியதை தொடர்ந்து அவரைப் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோட்டாறு போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.