கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலங்களில் பவனி, கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று (24-ம் தேதி) மாலை குலசேகரம் பகுதி தோட்டம், சி எஸ் ஐ திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி நடைபெற்றது. இந்த ஊர்வலமானது திருவரம்பு, அரமன்னம், தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வழியாக சென்று ஆலயத்தில் வந்தடைந்தது. இதில் சிறியோர், பெரியோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.