மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கு: பாஜக – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

0
20

கேரள மாநிலம் கண்​ணூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி பிர​முகர் சி.​வி.தன்​ராஜ். கண்ணூரின் எழிமலா பிரிவு செயல​ராக இருந்​தார். இந்​நிலை​யில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பையனூரிலிருந்து ராமன்​தளிக்கு சென்று கொண்​டிருந்த தன்​ராஜை, ஒரு கும்​பல் மோட்​டார் சைக்​கிளில் வந்து வழிமறித்து தாக்கி கொலை செய்தது.

இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்த கண்​ணூர் போலீ​ஸார், 20 பாஜக-ஆர்​எஸ்​எஸ் தொண்​டர்​களை கைது செய்து வழக்கு தொடர்ந்​தனர். இதில் 12-வது நபராக குற்​றம்​சாட்​டப்​பட்ட சி.பிஜு என்​பவர் கொலை செய்​யப்​பட்​டார். இதையடுத்து 19 பேர் மீது குற்றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்டு கண்​ணூரின் தளிபரம்பா கூடு​தல் செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் விசா​ரணை நடை​பெற்று வந்​தது. விசா​ரணை நிறைவடைந்த நிலை​யில் நீதிபதி கே.என்​.பிர​சாந்த் நேற்று தீர்ப்பு வழங்​கி​னார்.

குற்​றம்​சாட்​டப்​பட்ட பாஜக-ஆர்​எஸ்​எஸ் தொண்​டர்​கள் டி.பி.பிஜு (34), எம்​.​விபின் (34), எம்​.வை​சாக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்​கப்​பட்​டது. 16 பேர் வழக்​கி​லிருந்து விடுவிக்கப்பட்​டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here