சிஜேபி நிர்வாகி சவுரவ் தாஸ் இங்கிலாந்து செல்ல தடை

0
15

கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) முதன்மை செய்​தித் தொடர்​பாளர் சவுரவ் தாஸ், டெல்லி விமான நிலையத்திலிருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்​துள்​ளார்.

அதில், “ஆக்ஸ்ஃபோர்டு, கேம்​பி​ரிட்ஜ், லண்​டன் ஸ்​கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்​றும் எடின்​பர்க் போன்ற புகழ்​பெற்ற பல்​கலைக்​கழகங்​களில் கரப்​பான் இயக்​கம் குறித்து உரையாற்ற திட்டமிட்டிருந்​தேன். இதற்​காக இங்​கிலாந்து செல்ல முயன்ற எனக்கு விமான நிலை​யத்​தில் அனுமதி மறுக்​கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் கரப்​பான் இயக்​கம் பற்​றிப் பேசுவதற்​கான எனது வழியை மத்​திய அரசு தடுக்​கிறது” என குற்​றம் சாட்​டினார்.

ஆனால் சவுரவ் தாஸின் பாஸ்​போர்ட்​டில் அவர் பிறந்த இடம் தவறாக ‘சென்னை’ எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​ததால் விமானத்​தில் ஏற அனுமதிக்​கப்​பட​வில்லை என்ற தகவல் வெளியாகி உள்​ளது. இதன் விளைவாக, சென்னை மண்​டல பாஸ்​போர்ட் அலு​வல​கம் அவரது பாஸ்​போர்ட்டை பறி​முதல் செய்​வதற்​கான நடவடிக்கையைத் தொடங்​கி​யுள்​ளது. அவர் லண்​டனுக்​குப் புறப்பட​விருந்த நவம்​பர் 23 அன்று, சென்னை மண்​டல பாஸ்போர்ட் அலு​வல​கம் அவருக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பப்பி உள்​ள​தாக தகவல்​கள் கூறுகின்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here