மேகேதாட்டு அணை விவகாரம்: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

0
21

மேகேதாட்டு அணை விவ​காரத்​தில் அரசி​யல், சட்ட ரீதி​யாக அழுத்​தம் கொடுக்க வேண்​டும் என, அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: காவிரி என்​பது ஒரு மாநிலத்​தின் சொத்து அல்ல, இரு மாநில மக்​களின் வாழ்​வா​தார நதி. உச்​சநீ​தி​மன்ற தீர்ப்​பு​களை​யும், காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் நடை​முறை​களை​யும் மீறி, ஒருதலைபட்​ச​மாக அணைக்​கட்ட முயல்​வது கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கே எதி​ரானது.

தமிழகத்​தின் உரிமையை பாது​காக்க, மத்​திய அரசு உடனடி​யாக தலை​யிட்​டு, கர்​நாடக அரசின் இந்த முயற்​சியை தடுத்து நிறுத்த வேண்​டும். தமிழர்​களின் நீர்வள உரிமைக்​காக தமிழக காங்​கிரஸ் கட்சி என்​றும் உறு​தி​யாக குரல் கொடுக்​கும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: காவிரி நடுமன்ற தீர்ப்​புக்கு எதி​ராக கர்​நாடக அரசு, மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதற்​கான முயற்​சிகளை தொடர்ந்து மேற்​கொண்டு வரு​கிறது.

மேகே​தாட்டு அணை பிரச்​சினை தொடர்​பாக, கடந்த ஆட்​சிக் காலத்​தில் தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மறுசீ​ராய்வு மனுவை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

எனவே, தமிழகத்​தின் தண்​ணீர் உரிமை பறி​போகும் பேராபத்து ஏற்​பட்​டுள்ள நிலை​யில், மேகே​தாட்டு அணை கட்​டும் திட்​டத்தை தடுத்து நிறுத்​து​வது தொடர்​பாக, உடனடி​யாக தமிழக அரசு அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை கூட்​டி, அடுத்த கட்ட அரசி​யல் மற்​றும் சட்ட நடவடிக்​கைகள் மேற்​கொள்​வது குறித்து ஆலோ​சிக்க வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: காவிரி நதிநீர் மேலாண்மை வாரி​யத்​திடம் நமது தரப்பு நியா​யங்​களை ஆதா​ரங்​களோடு எடுத்​துக் கூறி, கர்​நாடக அரசு தயாரிக்​கும் விரி​வான திட்ட மதிப்​பீட்​டுக்​கு ஒப்​புதல் அளிக்​காமல் தடுக்க வேண்​டியதே நம் முன்​னால் இருக்​கும் முக்​கிய​மான உடனடிக் கடமை​யாகும்.

காவிரிப் பிரச்​சினை​யில் தமிழக அரசி​யல் கட்​சிகளிடையே ஒன்​று​பட்ட அரசி​யல் நிலைப்​பாடு தேவை. அதை ஏற்​படுத்த அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தைக் கூட்​டு​வதே சாலச் சிறந்த வழி​யாகும். இதை முதலமைச்​சர் பரிசீலிக்க வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் தயவால் ஆட்சி நடத்​திக் கொண்​டிருக்​கும் தவெக அரசு, தன் ஆட்சி அதி​காரத்​தைத் தக்​கவைக்க காவிரி விவ​காரத்​தில் மாநிலத்​தின் உரிமை​யைக் கர்​நாடக அரசிடம் தாரை​வார்க்​குமே​யா​னால், தமிழக மக்​களுக்கு அதை​விட மிகப்​பெரிய துரோகம் இருக்​காது என்​ப​தைக் கவனத்​தில் கொள்ள வேண்​டும்.

எனவே, மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் சட்​டரீ​தி​யாக மட்​டுமல்​லாது, தவெக​வின் கூட்​ட​ணிக் கட்​சி​யான காங்​கிரஸ் கட்​சி​யின் மேலிடம் மூலம் அரசி​யல் ரீதி​யாக​வும் அழுத்​தம் கொடுத்து தமிழகத்​தின் உரிமையை நிலை நாட்ட வேண்​டும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here