மார்த்தாண்டம்:   கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்

0
642

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (48). கொத்தனார். அதே பகுதி கண்ணதாசன் (38) என்பவர் சந்திரசேகரனிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை சந்திரசேகரன் திருப்பி கேட்டுள்ளார். 

இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று (மே 6) இரவு சுமார் 10 மணி அளவில் சந்திரசேகரனின் வீட்டுக்கு சென்ற கண்ணதாசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இரும்பு கம்பியால் சந்திரசேகரின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. 

காயமடைந்த சந்திரசேகரன் மீட்கப்பட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சந்திரசேகரன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here