பாகோடு:  பேருராட்சியை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

0
306

பாகோடு பேருராட்சி கம்யூனிஸ்டு தலைமையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நிர்வாகம் நடைபெற்று வருகின்றன. இந்த பேருராட்சி நிர்வாகம் சொத்து வரியை அறிவிப்பு இல்லாமல் உயர்த்தியுள்ளதாகவும், குப்பை மேலாண்மை செய்யாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், சாலை போடுவதில் பல முறைகேடுகளில் ஈடுபடுவதால் சாலைகள் செப்பனிட்டு ஒரு மாதத்திற்கும் முன் சாலைகள் பேயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதாகவும் புகார் உள்ளது. 

மேலும் மின் விளக்குகள் இன்றி பேருராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகள் இருளில் மூழ்கி தவிப்பதாகவும், குடிநீர் இணைப்பு வழங்க 25 ஆயிரம் வரை லஞ்சமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து பேருராட்சி பாஜக கவுன்சிலர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் மேல்புறம் சந்திப்பில் பாஜகவினர் நேற்று மாலையில் கண்டன தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மேல்புறம் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன், மேல்புறம் வடக்கு ஒன்றிய தலைவர் ஹரீஸ், மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி. சுரேஷ் உட்பட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here