தமிழ்நாடு அரசின் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பேரூராட்சிக்குட்பட்ட புதுக்குளம் பகுதியில் 180 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தலா ஒரு வீட்டிற்கு 1 லட்சத்து ஆயிரத்து 563 ரூபாய் வங்கி மூலம் கட்டிய பின்பும், வீட்டை காலி செய்ய அதிகாரிகள் மிரட்டி வருவதாக கூறி பாதிக்கப்பட்ட மக்களுடன் விசிகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிச -4) புகார் மனு அளித்தனர்.