மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி சார்பில் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜிஸ்தி முகமது தலைமை வகித்தார். செயலாளர் நவாஸ் கான், அபூபக்கர் சித்திக் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் புதுமடம் அலி, தலைமை கழக பேச்சாளர் நயினார் முஹம்மது, கோவை செய்யது உட்பட பலர் பேசினர்.
கூட்டத்தில் குமரி மாவட்ட சாலைகளில் பொது மக்களை அச்சுறுத்தி அசுர வேகத்தில் செல்லும் கனிம வள வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும், குளச்சல் ஆசாத் நகரில் அமைய உள்ள பூங்காவிற்கு காயிதே மில்லத் பெயர் சூட்ட வேண்டும், குளச்சல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமித்து மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், குளச்சல் ஏவிஎம் கால்வாயை தூர்வாரி படகு போக்குவரத்து துவங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.