குளச்சல்: வரதட்சனை கொடுமை;  6 பேர் மீது வழக்கு

0
65

குளச்சல் அருகே வெங்கஞ்சி விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் சாஜின். இவருக்கும் அதே பகுதி கிறிஸ்டியன் ஜோசியா (24) என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வரதட்சணையாக பெண் வீட்டார் சார்பில் 120 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம், ஒரு கார் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுரேஷ் சாஜின் மீண்டும் மனைவியிடம் தான் ஓட்டல் தொடங்க உள்ளதாகவும், மேலும் ரூ.15 லட்சம் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதை அடுத்து கிறிஸ்டியன் ஜோசியா பெற்றோர் ரூ.10 லட்சத்தை கொடுத்துள்ளனர். 

ஆனால் சுரேஷ் சாஜின் மேலும் 5 லட்சத்தை பெற்று தருமாறு கூறி தகராறு செய்து மனைவியை வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இதற்கு உடந்தையாக அவருடைய தந்தை தாய் உள்ளிட்டவர்களும் செயல்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கிறிஸ்டியன் ஜோசியா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க குளச்சல் மகளிர் போலீசுக்கு எஸ்பி உத்தரவிட்டார். தொடர்ந்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ் சாஜின், அவருடைய தந்தை அப்பு பிரேமன் (57), தாய் ஸ்டெல்லா (51), சகோதரர் ஷாஜிகுமார், அவருடைய மனைவி வினிலா மற்றும் பெர்லின் ஆசிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here