கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் நர்மன் (வயது 49), மரக்கட்டைகள் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும் மேலசூரங்குடியை சேர்ந்த ரபீஸ் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று நர்மன் ஆசாரிபள்ளம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ரபீஸ் கத்தியால் நர்மனை குத்த முயன்றார். ஆனால் அதில் இருந்து அவர் தப்பினார். பின்னர் இதுகுறித்து நர்மன் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரபீசை போலீசார் கைது செய்தனர்.