கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை வணக்கம் பூஜைகள் முடிந்து மேளதாளத்துடன் திருவிழா கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து மூல கோயிலில் இருந்து அம்மன் எழுந்தருளி கரிவயல், கொல்லங்கோடும் மடம், சாஸ்தா நகர், திருமன்னம் சந்திப்பு ஆகிய இடங்களில் பூஜை நடத்தப்பட்டு, மதியம் மீண்டும் மூலக் கோயிலை வந்து அடைந்தது. பின்னர் மாலை 4 மணியளவில் அம்மன் மூல கோயிலில் இருந்து எழுந்தருளி முத்துக் குடை அணிவகுக்க மேளதாளத்துடன் கண்ணனாகம் சந்திப்பு வழியாக ஸ்ரீதேவி மகளிர் பள்ளி, கீழ வீடு நாகராஜா காவு, இளம்பலம்முக்கு மகாதேவர் கோயில் வழியாக திருவிழா கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து திருவிழா கோவிலில் அம்மனுக்கு பூஜைகள் முடித்து சரணகோஷம் முழங்க தேவஸ்தான தந்திரி ஈஸ்வரன் போற்றி தலைமையில் இரவு 8:25 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் விழா நடைபெறுகிறது.