கொல்லஞ்சி: சாலை பணியினை தடுத்து நிறுத்திய பொது மக்கள்

0
460

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லஞ்சி ஊராட்சி உட்பட்ட புல்லாணி பகுதியில் குளத்தின் கரையோரம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் படி ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணி நடந்தது. சாலை மிகவும் தரமானதாக அமைக்கப்படவில்லை. 

ஆகவே அப்பகுதி பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சாலையை தரமாக அமைக்க ஒப்பந்தக்காரரிடம் கூறியுள்ளனர். சாலையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் கலவை கைகளால் பெயர்ந்து வரக்கூடிய அளவில் சாலையின் தரம் மிக மோசமாக உள்ளது. 

பொதுமக்கள் காணும் முன் அவசர அவசரமாக சாலை அமைத்து மூடி செல்ல முயன்ற பொறியாளர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை ஊர் மக்கள் திரண்டு தரமற்ற சாலை பணியை இன்று தடுத்து நிறுத்தினர். மேலும் மிகவும் தரமான முறையில் சாலை அமைத்து விடவும் ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here