தமிழக நூலக அருள்பணி இயக்க ஆலோசனைக் கூட்டம் மற்றும் குமரி மு ராஜேந்திரன் எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா கருங்கல் அருகே உள்ள கல்நாட்டி விளையில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் ரூபி ஆர்தர் தலைமை தாங்கினார். இயக்கத்தின் முதல் தலைவர் போதகர் தேவதாஸ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் அஜித் சிங் ஜான் அனைவரையும் வரவேற்று பேசினார். இயக்கத்தின் ஸ்தாபகரும் பொதுச் செயலாளருமான டாக்டர் சுந்தர்ராஜ்
நூலக அருள் பணி இயக்கம் கடந்து வந்த பாதைகளை பற்றியும், உலக வாசிப்பு நாளை யொட்டி இம்மாதம் இறுதியில் நடத்தும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி பற்றியும் எடுத்துரைத்தார்.
தலைவர் ரூபி ஆர்தர்”உலக உத்தமர் பாரத தேசத் தந்தை மகாத்மா காந்தி”என்ற நூலையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் எம் ஏ சாந்தகுமார்”அதிசயப் பிறவி மாபெரும் தலைவர் காமராஜர்”என்ற நூலையும் வெளியிட்டு பேசினர்.
இதில் கருங்கல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க செயலாளர் எழுத்தாளர் ஓலக்கோடு ஜான் பேராசிரியர் டாக்டர் சாமுவேல் ரவி ஆகியோர் எழுத்தாளரை வாழ்த்தி பேசினர். நூலாசிரியர் வழக்கறிஞர் குமரி மு ராஜேந்திரன் ஏற்புரையாற்றினார். இறுதியில் ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.