களியக்காவிளை: செம்மண் கடத்திய டெம்போ – ஜே. சி. பி. பறிமுதல்

0
347

களியக்காவிளை அருகே ஈத்தவிளை பகுதியில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் செம்மண் கடத்துவதாக நேற்று போலீசாருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து சிலர் வாகனத்தில் செம்மண் கடத்துவது தெரியவந்தது. அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடமுயன்றது. ஆனால் போலீசார் விரைந்து சென்று வாகனத்தில் வந்த 3 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக அனுமதியின்றி செம்மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ மற்றும் ஜே.சி.பி. வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து செம்மண் கடத்தியதாக புதுக்கடை தினேஷ்(48), ஈத்தவிளை மரியலாரன்ஸ்(55) மற்றும் மோகன் ராஜ்(50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here