கொல்லங்கோடு: டெம்போ பேட்டரி திருடியவர் கைது

0
464

கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (37). இவருக்குச் சொந்தமான டெம்போவை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது வண்டியிலிருந்த பேட்டரி மற்றும் ஜாக்கியை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இதுசம்பந்தமாக ஜெகன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த அஜி (37) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து பேட்டரி மற்றும் ஜாக்கியை மீட்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here