இரணியல்: வீட்டில் விபச்சாரம்; 2 பெண் புரோக்கர்கள் கைது

0
262

இரணியல் அருகே சுங்கான்கடை அடுத்த பனவிளை பகுதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இரணியல் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை இன்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண் புரோக்கர்கள் உட்பட 3 பெண்களை பிடித்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேரையும் இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து, வெளி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து இளம் பெண்ணை மீட்ட போலீசார் அவரை தோட்டியோடு பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெண் புரோக்கர்கள் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here