நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க தீவிர நடவடிக்கை: கொள்முதல் நிலையங்களை மேம்படுத்தவும் அரசு அறிவுறுத்தல்

0
20

தமிழகத்​தில் நேரடி நெல் கொள்​முதல் மற்​றும் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் தொடர்​பான ஒருங்​கிணைந்த ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடந்​தது.

இதற்கு உணவுத் துறை பி.வெங்​கடரமணன், கூட்​டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​தி​ராஜ், வேளாண்மை துறை அமைச்​சர் ஆர்​.​வினோத் ஆகியோர் தலைமை வகித்​தனர்.

தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் தலை​வர் பு.உ​மா​நாத், வேளாண்மை துறை செயலர் பொ.சங்​கர், வேளாண்​மைத் துறை இயக்​குநர் க.வீ.​முரளதரன் உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.

இதில், கொள்​முதல் செய்த நெல்லை பாது​காப்​பாக சேமித்து உரிய காலக்​கெடு​வில் அரவைக்கு அனுப்​புவது, நெல் மூட்​டைகள் மழைநீ​ரால் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க முன்​னெச்​சரிக்​கைப் பணி​களை தீவிரப்​படுத்​து​வது குறித்து விரி​வாக ஆய்வு செய்​யப்​பட்​டது.

நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டதற்​கான நிலு​வைத் தொகை ரூ.129.82 கோடியை உடனே விடுவிக்க தேசிய கூட்​டுறவு நுகர்​வோர் கூட்​டமைப்பு அலு​வலரிடம் வலி​யுறுத்​தப்​பட்​டது.

பசிபிக் பெருங்​கடலில் உரு​வாகும் எல்​-நினோ காலநிலை நிகழ்வு தொடர்​பாக எடுக்​கப்​பட்​டுள்ள முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது. மழைக் காலங்​களில் தார்ப்​பாலின் உறை​கள், நைலான் ரோப் மூலம் மூட்​டைகள் மழைநீ​ரால் பாதிக்​கப்​ப​டாத​படி பாது​காக்க வேண்​டும்.

நெல் மூட்​டைகளின் ஈரப்​ப​தம் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்​டு, தேவை​யான காற்​றோட்ட வசதி​கள் ஏற்​படுத்​தப்பட வேண்​டும். அவசர​காலத் தேவை​களுக்​கான உபகரணங்​களைதயார் நிலை​யில் வைக்க வேண்​டும்.

கொள்​முதல் நிலை​யங்​களில் நெல்​லின் ஈரப்​பத்தை நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவான 17 சதவீதத்​துக்​கும் குறை​வாக இருக்​கு​மாறு கண்​காணிக்​க​வும், நெல் பதர்​கள் தேங்​காமல் உடனுக்​குடன் அகற்​ற​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இந்த நடவடிக்​கை​களில் ஏதேனும் குறை​பாடு​கள் கண்​டறியப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் பொறுப்​பேற்க நேரிடும். கொள்​முதல் நிலை​யங்​கள், திறந்​தவெளி சேமிப்பு மையங்​களில் பராமரிப்பை மேம்​படுத்​தி, நெல் மூட்​டைகள் பாது​காப்​பாக சேமிக்​கப்பட வேண்​டும்.

குறிப்​பாக, கொள்​முதல் நிலை​யங்​களை மேடான பகு​தி​களில் அமைத்து, மழைநீர் எளி​தில் வடிந்​துசெல்​லும் வடி​கால் வசதி​யுடன் இருக்க வேண்​டும் என்று அறி​வுறுத்தி உள்​ள​தாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here