தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை: மாநகராட்சி முழுவதும் தீவிரப்படுத்த முடிவு

0
20

 தெரு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளும் பணி தொடர்​பாக மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்​னை​யில் தெரு நாய்​கள், செல்​லப்​பி​ராணி​களை பராமரிப்​பது தொடர்​பாக, விலங்கு நல தொண்டு நிறு​வனம், தெரு நாய்​களை பராமரிக்​கும் தன்​னார்​வலர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தலை​மை​யில் ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

​கூட்​டத்​தில் சட்ட விதி​களுக்கு உட்​பட்டு தெரு நாய்​களை மேலாண்மை செய்​வது குறித்து அனைத்​துத் தரப்​பினரிட​மும் விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது.

தெரு நாய்​களை கட்​டுப்​படுத்​து​வது குறித்து தற்​போது உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்​றத்​தால் வழங்​கப்​பட்​டுள்ள தீர்ப்​பு​களை செயல்​படுத்​து​வது குறித்​தும், பொது​மக்​கள் மற்​றும் நாய்​களுக்கு உணவு அளிக்​கும் தன்​னார்​வலர்​களுக்கு இதுகுறித்து விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

தெரு நாய்​களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்​றும் வெறி நோய் தடுப்​பூசி செலுத்​தும் பணியை தீவிரப்​படுத்​த​வும் பரிந்​துரைக்​கப்​பட்​டது.

தெரு நாய்​களின் எண்​ணிக்​கையை கட்​டுப்​படுத்த புளியந்​தோப்​பு, கண்​ணம்​மாப்​பேட்​டை, லாயிட்ஸ் காலனி, மீனம்​பாக்​கம், சோழிங்​கநல்​லூர், செட்​டிமேடு (2 மையங்​கள்), திரு​வொற்​றியூர், மாதவரம், பெருங்​குடி மற்​றும் கண்​ணப்​பர் திடல் என 11 இடங்​களில் நாய் இனக்​கட்​டுப்​பாடு மையங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

40 நாய் பிடிக்​கும் வாக​னங்​கள், 336 நாய் பிடிக்​கும் பணி​யாளர்​களால் நாளொன்​றுக்கு சுமார் 200 தெரு நாய்​களுக்கு கருத்​தடை அறுவை சிகிச்​சைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

கூடு​தலாக அம்​பத்​தூர், ஆலந்​தூர், பெருங்​குடி, சோழிங்​கநல்​லூர் ஆகிய 4 இடங்​களில் நாய் இனக்​கட்​டுப்​பாடு மையங்​கள் தொடங்​கு​வதற்​கான கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இக்​கூட்​டத்​தில் மாநக​ராட்சி துணை ஆணை​யர் சித்ரா விஜயன், மாநகர நல அலு​வலர் ஜெகதீசன், தலைமை கால்​நடை மருத்​துவ அலு​வலர் கமால் உசேன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here