பழநியில் தனியாரிடம் வாங்கப்படும் 24 ஹெக்டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்றப்படும்: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத் துறை தகவல்

0
21

பழநியில் பக்​தர்​கள் வசதிக்​காக தனி​யாரிடம் ரூ.58.54 கோடிக்கு வாங்​கப்​படும் 23.78.5 ஹெக்​டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்​றப்​படும் என உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது.

சென்​னையை சேர்ந்த டி.ஆர்​.ரமேஷ், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு: பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோ​யிலுக்கு வரும் பக்​தர்​களுக்​கான திட்​டங்​களை செயல்​படுத்த 23.78.5 ஹெக்​டேர் தனி​யார் நிலம் கையகப்​படுத்​த​வும், அந்த நிலத்​துக்கு ரூ.58 கோடியே 54 லட்​சத்து 63 ஆயிரத்து 724-ஐ இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் நிர்​வாக நிதியி​லிருந்து இழப்​பீ​டாக வழங்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அந்த இடத்​தில் கோயிலுக்கு தடை​யில்லா மின்​சா​ரம் வழங்க துணை மின் நிலை​யம், பக்​தர்​களுக்​கான குளியலறை, கழிப்​பறை, மருத்​துவ வசதி​களு​டன் கூடிய தங்​குமிடம், விழாக் காலங்​களில் போக்​கு​வரத்து நெரிசலை தவிர்க்க பழநி பைபாஸ் சாலை​யி​லிருந்து கிரி வீதி மற்​றும் சுற்​றுலா பேருந்து நிறுத்​தம் வரை இணைப்​புச் சாலை அமைக்​கப்​படும் என அறநிலை​யத்​துறை முதன்​மைச் செயலர் கடந்த 2022 டிச. 26-ல் உத்​தர​விட்​டார்.

இந்த நடவடிக்கை இந்து சமய அறநிலை​யத் துறை சட்​டத்​துக்கு புறம்​பானது. கோயில் நிதியை குறிப்​பிட்ட நோக்​கங்​களுக்​காக மட்​டுமே செல​விட அறநிலை​யத் துறை சட்​டம் அனு​ம​திக்​கிறது.

அதன்​படி இந்த பணி​களை கோயில் நிதி​யில் மேற்​கொள்​ளக் கூடாது. இது தொடர்​பான அரசாணையை ரத்து செய்ய வேண்​டும். அது​வரை அரசாணையை செயல்​படுத்த இடைக்​காலத் தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

மனுவை நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், ஆர்​.பூர்​ணிமா அமர்வு விசா​ரித்​தது. கோ​யில் தரப்​பில், கோ​யில் நிதி​யானது கோயி​லின் மேம்​பாட்​டுப் பணிக்கு மட்​டுமே பயன்​படுத்​தப்​படும்.

நிலம் கையகப்​படுத்த தமிழக அரசு இழப்​பீடு வழங்​கி​யுள்​ளது. அத்​தொகையை அரசுக்கு கோ​யில் நிர்​வாகம் வழங்​கும். நிலம் கோ​யில் பெயரில் மாற்​றம் செய்​யப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டது. இதை பதிவு செய்​து​கொண்டு மனுவை முடித்து வைத்து நீதிப​தி​கள் உத்​தரவிட்​டனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here