“தக்கலை அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் – தலைமையாசிரியர் இடமாற்றம்”

0
75

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், போட்டித் தேர்வு சிறப்பு வகுப்புக்கு வந்த சில மாணவிகள், மற்றவர்கள் சென்ற பின்னர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. மாணவியின் ஆண் நண்பர் மதுபாட்டில் மற்றும் உணவு வாங்கிக் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். தக்கலை போலீசார் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளில் மதுபானம், போதைப்பொருள் விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here