சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

0
33

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென், தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்துள்ளார். ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது இளம் பருவத்தில் சல்மான் கான் மீது காதல் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “சல்மான் கானின் முதல் படம் வெளியான போதே அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. வீட்டில் என் செலவுக்குத் தரும் பணத்தை அவருடைய போஸ்டர் வாங்குவதற்காகச் செலவிட்டேன். அப்போது வீட்டுப் பாடத்தை சரியான நேரத்தில் முடிக்காவிட்டால், அந்த போஸ்டர்களை அறையிலிருந்து அகற்றிவிடுவதாக என் வீட்டில் கூறி மிரட்டுவார்கள். போஸ்டரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சரியான நேரத்தில் அதை முடிப்பேன். அப்போது நான் அவர் மீது காதலில் இருந்தேன். பிறகு நாங்கள் நண்பர்கள் ஆன பின், அவரிடம் இந்தக் கதையை சொன்னேன்” என்று தெரிவித்துள்ளார்.

சல்மான் கானும் சுஷ்மிதா சென்னும் இணைந்து, ‘பீவி நம்பர் 1’, ‘மை னே பியார் கியூன் கியா’ உட்பட சில படங்களில் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here