ஒய்.ஜி.மகேந்திரா, சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘சாருகேசி’.
அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். தேவா இசையமைத்துள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
கருனாடக இசைப் பின்னணியில் உருவான இப்படம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, “இந்தப் படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது. ஏனென்றால் இதன் கதை அப்படி.
கருனாடக இசைப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்துக்குத் தேவா சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார். ஒய். ஜி. மகேந்திரா உள்பட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.















