எழுதேசப்பற்று: அரசுப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

0
267

நித்திரவிளை அருகே ஏழுதேசப்பற்று அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கநிலை (யு.கே.ஜி.) மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 27 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் டெல்பின் மேரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் எழுத்தாளர் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பத்மநாதன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சுஜித்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தனியார் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறும் இத்தகைய பட்டமளிப்பு விழா, அரசுப் பள்ளிகளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here