மனவேதனையில் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

0
247

கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை அருகே உள்ள மேல்தாராவிளை பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி மகன் சிவகுமார் (வயது 46). பெயிண்டரான இவருடைய மனைவிராஜேஸ்வரி. 2 மகன் கள் உள்ளனர். சிவகுமார் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து சிவகுமார் மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (செப்.,23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் நேற்று (செப்.,24) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here