குஜராத்தில் இன்று நடைபெறும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல் முறையாக ‘புக்மைஷோ’ மூலம் டிஜிட்டல் பதிவு

0
22

குஜராத் மாநிலம் வதோத​ரா​வில் இன்று நடை​பெறவுள்ள பிரதமர் நரேந்​திர மோடி​யின் விழா​வில் பங்​கேற்​ப​தற்​கான இலவச முன்​ப​திவு முதன்​முறை​யாக ‘புக்​மைஷோ’ (BookMyShow) செயலி மூலம் தொடங்​கப்​பட்​டது. ஒரு மணி நேரத்திற்​குள் அனைத்து இடங்​களும் நிரம்​பின.

வதோதரா மாநக​ராட்சி சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்ட இந்த டிஜிட்டல் முயற்​சிக்கு மக்​களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்​ள​தாக​வும், அனைத்து இடங்​களும் முன்​ப​திவு செய்யப்பட்ட நிலை​யில் மேலும் 42,000-க்​கும் மேற்​பட்​டோர் காத்திருப்​புப் பட்​டியலில் வைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் அதிகாரப்பூர்வ செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம் நிகழ்ச்​சிக்கு வருபவர்​களுக்கு ‘எம்​-டிக்​கெட்’ மற்​றும் கியூ.ஆர் குறி​யீடு வழங்​கப்​படும். டிஜிட்​டல் முறை​யில் நுழைவுச் சீட்டு சரி​பார்க்​கப்​பட்​டு, கூட்ட நெரிசலின்றி பார்​வை​யாளர்​கள் தங்​களின் இருக்​கைகளுக்​குச் செல்​ல​வும் ஏற்​பாடு​கள் செய்யப்பட்டுள்​ளன.

பிரத்​யேக சரக்கு ரயில் பாதை

குஜ​ராத் மாநிலம் வதோத​ரா​வுக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்​திர மோடி, அங்கு முடிவுற்ற பல்​வேறு வளர்ச்​சித் திட்டங்களைத் தொடங்கி வைத்​து, புதிய திட்​டங்​களுக்​கும் அடிக்கல் நாட்​ட​வுள்​ளார். குறிப்​பாக, மேற்கு பிரத்​யேக சரக்கு ரயில் பாதை​யின் கீழ் ரூ.20,700 கோடிக்​கும் அதி​க​மான செல​வில் 326 கிலோமீட்​டர் தொலை​வுக்கு அமைக்​கப்​பட்​டுள்ள சனந்த் (வடக்​கு)-மகர்​பு​ரா, நியூ உம்​பர்​கான்​-நியூ சஃபாலே மற்​றும் நியூ சஃபாலே-ஜே.என்​.பி.டி ஆகிய மூன்று பிரிவு​களை பிரதமர் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார்.

இதன் மூலம் மும்பை ஜவஹர்​லால் நேரு துறை​முகத்​துடன் நேரடி ரயில் இணைப்பு ஏற்​பட்​டு, தொழிற்​பேட்​டைகளுக்​கான சரக்கு போக்​கு​வரத்து விரைவுபடுத்​தப்​படும். மேலும், நியூ சனந்த், நியூ மகர்​பு​ரா, நியூ உம்​பர்​கான் மற்​றும் மும்பை நியூ ஜே.என்​.பி.டி ஆகிய இடங்​களி​லிருந்து புதிய சரக்கு ரயில் சேவை​களை​யும், வதோதரா – தாண்டா ரோடு இடையி​லான புதிய பயணி​கள் ரயில் சேவையை​யும் பிரதமர் கொடியசைத்​துத் தொடங்கி வைக்​கிறார்.

ரூ.14,000 கோடி​யில் திட்​டங்​கள்

இதுத​விர, ரூ.9,700 கோடி மதிப்​பிலான 329 கி.மீ தொலை​வுள்ள 3 புதிய ரயில்வே திட்​டங்​களுக்​கும் (வதோத​ரா-ரத்​லம் 3 மற்​றும் 4 வது ரயில் பாதைகள், மியாகம் கர்​ஜன்​-சோரண்​டா-மல்​சார் அகலப்​பாதை மாற்​றம், விஷ்​வாமித்​ரி-த​போய் இருப்​புப் பாதை இரட்​டிப்​பாக்​கம்), ரூ.1,780 கோடி மதிப்​பிலான 3 தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​களுக்​கும், ரூ.2,600 கோடி மதிப்​பிலான குஜ​ராத் மாநில அரசின் திட்​டங்​களுக்​கும் பிரதமர் அடிக்​கல் நாட்​டு​கிறார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here