இஸ்ரோ ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது: தேசிய விண்வெளி அமைப்பு தலைவர் தகவல்

0
18

இஸ்ரோ ஒரு​போதும் தனி​யார் மயமாக்கப்படமாட்டாது என தேசிய விண்​வெளி ஊக்​கு​விப்பு அமைப்​பின் தலை​வர் தெரி​வித்​துள்​ளார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்​ரோ) தனியார்மயமாக்​கப்பட உள்​ள​தாக சமீபத்​தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தெளி​வான தகவலை தெரிவிக்க வேண்​டும் என 9 இஸ்ரோ ஊழியர் சங்​கங்​கள் கோரிக்கை வைத்திருந்​தன.

இதையடுத்​து, இந்​திய தேசிய விண்​வெளி ஊக்​கு​விப்பு மற்​றும் அனு​மதி மையத்​தின் (இன்​ஸ்​பேஸ்) தலை​வர் பவன் கோயங்கா வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இஸ்ரோ தனி​யார்​மய​மாக்​கப்பட உள்​ள​தாக ஊகத்​தின் அடிப்​படை​யில் வெளி​யான தகவலில் உண்மை இல்​லை. இஸ்ரோ ஒரு​போதும் தனி​யார் மயமாக்​கப்​பட​மாட்​டாது. அதன் முக்​கி​யத்​து​வ​மும் குறைக்கப்படமாட்​டாது.

விண்​வெளி​யில் தனி​யார் துறை​யின் பங்​கேற்பு என்​பது அதன் பங்கைக் குறைப்​பது பற்​றியது அல்ல. முதிர்ந்த தொழில்நுட்பங்களை​யும் திறன்​களை​யும் தொழில் துறை வளர்த்தெடுக்​கும் அதேவேளை​யில், இந்​தி​யா​வின் அடுத்த தலை​முறை விண்​வெளித் திட்​டத்​தின் மீது இஸ்ரோ இன்​னும் தீவிர​ கவனம் செலுத்த உதவும். மாறிக்கொண்​டிருப்​பது இஸ்​ரோ​வின் முக்​கி​யத்​து​வம் அல்ல, மாறாக இந்​தி​யா​வின் விண்​வெளி சுற்​றுச்​சூழல் அமைப்​பின் அளவும் கட்​டமைப்​பும்​தான்.

2020 முதல் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் சீர்​திருத்​தங்​கள் இந்தியாவின் ஒட்​டுமொத்த விண்​வெளி சுற்​றுச்​சூழல் அமைப்பை விரிவுபடுத்​து​வது குறித்தே ஆகும். இன்​ஸ்​பேஸ் என்​பது தனியாரின் விண்​வெளி துறை பங்​களிப்பை மேலும் எளி​தாக்கி அனு​மதி வழங்​கும். மேம்​பட்ட விண்​வெளி ஆராய்ச்சி மற்​றும் தொழில்​நுட்ப மேம்​பாடு, விண்​வெளி அறி​வியல், ஆய்​வு, முக்கியமான மற்​றும் எல்​லைப்புற விண்​வெளி திறன்​கள் ஆகிய​வற்​றுக்​கான இந்​தி​யா​வின் முதன்மை நிறு​வன​மாக இஸ்ரோ தொடர்ந்து தி​கழும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here