டெல்லி விடுதி விபத்தில் உயிரிழப்பு 7 ஆனது – அதிகாரிகள் 5 பேர் பணி இடைநீக்கம்

0
14

டெல்லியில் மாணவர் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்துள்​ளது. விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் 5 பேரை இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்​டது.

இந்த விபத்​தில் 3 பேர் உயி​ரிழந்​த​தாக முதற்​கட்ட தகவல் வெளியான நிலை​யில், மேலும் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​தது. மேலும், 5 பேர் மருத்​து​வ​மனை​யில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்​களில் சிலரின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக தெரி​கிறது. இதனால் உயி​ரிழப்பு மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என அஞ்​சப்​படு​கிறது.

விபத்​துக்​குள்​ளான கட்​டிடத்​தில் இன்​னும் சில மாணவர்​கள் சிக்​கி​யிருக்​கலாம் என நம்​பப்​படு​வ​தால் 2-வது நாளாக நேற்​றும் மீட்பு பணி​கள் தொடர்ந்​தன. முதல்வர் ரேகா குப்தா நேற்று நேரில் சென்று மீட்​புப் பணி​களை ஆய்வு செய்​தார். கட்​டிடத்​தின் அடித்​தளத்​தில் தண்​ணீர் தேங்​கியதும், 50 ஆண்​டு​கள் பழமை​யான அந்​தக் கட்​டிடத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட மறுசீரமைப்​புப் பணி​களுமே விபத்​துக்​குக் காரணம் என அவர் தெரி​வித்​தார்.

“விபத்து தொடர்​பாக நீதி விசா​ரணை நடத்​த​வும், கட்​டிட உரிமையாளர் மீது வழக்​குப் பதிவு செய்​ய​வும் உத்தரவிட்டுள்ளேன்” என்​றார். விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி துணை ஆணை​யர், செயல் பொறி​யாளர், கண்​காணிப்​புப் பொறியாளர், உதவிப் பொறி​யாளர் மற்​றும் இளநிலைப் பொறியாளர் ஆகிய 5 அதி​காரி​களை பணி இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்டுள்ளது. கட்​டிட உரிமை​யாள​ரான 81 வயதான ஹரி​ராம் குப்தா நேற்று ராஜஸ்​தானின்​ பிவாடி நகரில்​ கைது செய்​யப்​பட்டுள்ளார். மேலும் அவரது மனைவியையும் மகனையும் போலீஸார் கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here