இந்தோனேசியாவில் தொடரும் கிரகடாவ் எரிமலை சீற்றம்: 8 விமான நிலையங்கள் மூடல்

0
14

இந்தோனேசியாவின் ‘அனக் கிரகடாவ்’ எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது.

தலைநகர் ஜகார்த்​தா​வின் சுகர்​னோ-ஹட்டா மற்​றும் ஹலீம் பெர்தா​னாக்​குசுமா உள்​ளிட்ட 8 முக்​கிய விமான நிலை​யங்​களில் சேவை​கள் தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. இதனால் சுமார் 1,70,000 பயணி​கள் விமான நிலை​யங்​களில் தவித்து வரு​கின்​றனர்.

ஜூலை மாதத்​துக்​குப் பிறகு கடந்த ஞாயிற்​றுக்​கிழமை ஏற்​பட்ட வெடிப்பே மிக​வும் சக்​தி​வாய்ந்​த​தாக இருந்​த​தாக​வும், பூமிக்கடியில் லாவா குழம்பு மற்​றும் வாயுக்​களின் அழுத்​தம் தொடர்ந்து அதி​கரித்து வரு​வ​தால், மீண்​டும் பெரிய அளவி​லான வெடிப்​பு​கள் ஏற்பட வாய்ப்​புள்​ள​தாக​வும் புவி​யியல் மையத்​தின் தலை​வர் லானா சாரியா எச்​சரித்​துள்​ளார்.

எரிமலைச் சாம்​பல் பாதிப்பு அதி​க​மாக உள்ள ஜகார்த்தா மற்​றும் லம்​பாங் பகு​தி​களில் உள்ள பள்​ளி​களுக்கு விடு​முறை அளிக்கப்பட்​டு, வகுப்​பு​கள் இணை​ய​வழி​யில் மாற்​றப்​பட்​டுள்​ளன.

உயி​ரிழப்​பு​கள் எது​வுமில்லை என்ற போதி​லும், மக்​கள் வெளி​யில் செல்​லும்​போது முகக்​கவசம் அணி​யு​மாறும், எரிமலை​யின் சுற்றள​விலிருந்து குறைந்​த​பட்​சம் 3 கிலோமீட்​டர் தூரத்​துக்கு அப்பால் இருக்​கு​மாறு பொது​மக்​களை பேரிடர் மேலாண்மை முகமை கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here