பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் புறநகர் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக 17 வயதான பென் ஆஸ்டின் விளையாடி வந்தார். கடந்த 28-ம் தேதி பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து பென் ஆஸ்டினின் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. இதனையடுத்து அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வினையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கான்பெராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி மெல்பர்னில் இன்று நடைபெறுகிறது. இரு...
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி, இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
4 நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 3 மாதங்களுக்கு...
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்தியாவின் ஸ்ரீவள்ளி, சகஜா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
admin - 0
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மோந்தா புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் தொடர்ச்சியாக 2 நாட்கள் போட்டிகளை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 3-வது நாளான நேற்று போட்டிகள் தொடங்கின.
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான செக்குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.
ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்களும், கேப்டன் ஹாரி புரூக் 34...
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த தொடரில் விளையாட தகுதி பெற்றிருந்த பாகிஸ்தான் அணி கடந்த வாரம் திடீரென விலகியது. இதைடுத்து மாற்று அணி விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச...
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
இந்திய அணி அரை இறுதிக்கு போராடியே தகுதி பெற்றிருந்தது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக தொடங்கிய இந்திய அணி அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வி அடைந்து பின்னடைவை சந்தித்தது....
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மோந்தா புயல் காரணமாக மழை பெய்ததால் மைதானத்தில் உள்ள அனைத்து ஆடுகளங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக முதல் நாளில் நடைபெற இருந்த அனைத்து ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த ஆட்டங்கள் 2-வது நாளான நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டிகளை பகல் 12 மணிக்கு தொடங்க திட்டமிட்டு...
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
29 வயதான மந்தனா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 109 ரன்கள் விளாசியிருந்தார். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 34 ரன்கள் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் 731 புள்ளிகளுடன் 6 இடங்கள்...
ஆஸ்திரேலியாவுடன் முதல் டி 20-ல் இன்று மோதல்: பார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்
admin - 0
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று பிற்கல் 1.45 மணிக்கு முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட...








