நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர்: 1983 உலகக் கோப்பை ஒரு முழு தலைமுறையை பெரிய கனவுகளை காணவும், அந்த கனவுகளைத் துரத்தவும் தூண்டியது. தற்போது, நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச்...
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் 58 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் இந்தியாவின் தீப்தி சர்மா.
நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 299 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி விரட்டியது....
நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருக்கிறது இந்திய அணி. இதில் முக்கியப் பங்களிப்பாக பேட்டிங்கில் தொடக்க வீரராக இறங்கி ஷெஃபாலி வர்மா அடித்த 87 ரன்களும், பிறகு அவர் சுழற்பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ‘இது ஷெஃபாலியின் நாள் என்று எனக்குத் தெரியும்’ என்று...
தென் ஆப்பிரிக்க ஏ அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 309 ரன்களும், இந்திய ஏ அணி 234 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய...
ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி கண்டு வெளியேறினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் புத்ரி குஸுமா வர்தானி 21-7, 21-13 என்ற நேர் செட்களில் இந்தியாவின் உன்னதி ஹூடாவை வீழ்த்தினார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான சர்வதேச டி20 தொடரில் பங்கேற்கும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடர் வரும் 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நியூஸிலாந்து அணி விவரம்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃப்பி, ஜாக் பவுல்க்ஸ், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், டிம்...
தமிழக அணிக்கெதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் ஷாருக் கான் 0, பாபா இந்திரஜித் 94 ரன்களுடன் தொடங்கினர்.
இந்திரஜித் 96...
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சந்திரகாந்த் பண்டிட் இந்த சீசனுடன் அணியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக 43 வயதான அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் நாயர், இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்கள் வட்டராத்தில் பிரபலமானவர். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் உள்ளிட் டோருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில்...
கனடாவின் டொராண்டோ நகரில் கனடா ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஜார்ஜியானா கென்னடியுடன் மோதினார்.
இதில் அனஹத் சிங் 0-3 (5-11 8-11 10-12) என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 30 நிமிடங்களில் முடிவடைந்தது.
புரோ கபடி லீக் 12-வது சீசனின் இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி - புனேரி பல்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி தியாக ராஜ் உள்ளரங்க மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
8-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற தபாங் டெல்லி நடப்பு சீசனில் லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்திருந்தது. குவாலிபயர் 1-ல் புனேரி பல்தான்...









