Google search engine
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களம் கண்ட இடது கை மித வேகப்பந்து வீச்சாளர் அஸ்வனி குமார் அமர்க்களம் செய்துள்ளார். திங்கள்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரஸ்ஸல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் அஸ்வனி குமார். அதன் மூலம் மும்பை அணி இந்த...
ஐபிஎல் லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வி அடைந்தாலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டம் தொடரும் என்று அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி, ஒரு...
ஐபிஎல் கிரிக்​கெட் சீசனின் இன்​றைய லீக் ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயன்ட்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதவுள்​ளன. உத்​தரபிரதேச மாநிலம் லக்​னோ​விலுள்ள அடல்​பி​காரி வாஜ்​பாய் இகானா கிரிக்​கெட் மைதானத்​தில் இந்​தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்​குத் தொடங்​க​வுள்​ளது. லக்னோ அணி இது​வரை 2 போட்​டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, ஒரு தோல்வி என்ற நிலை​யில் களமிறங்​கு​கிறது. முதல் போட்​டி​யில் டெல்லி அணி​யிடம் தோல்வி கண்ட லக்​னோ, 2-வது ஆட்​டத்​தில்...
சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணிக்கு எதி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் பந்​து​ வீச்​சு​தான் எங்​களைக் காப்​பாற்​றியது என்று ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் கேப்​டன் ரியான் பராக் தெரி​வித்​தார். குவாஹாட்​டி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற லீக் போட்​டி​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சிஎஸ்கே அணியை வீழ்த்​தி​யது. முதலில் விளை​யாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 182 ரன்​கள் எடுத்​தது. நித்​திஷ் ராணா...
மெதுவாக பந்துவீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 18-வது ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த லீக் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ரியான் பராகுக்கு ஐபிஎல் ஆணையம் சார்பில்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, நேற்று முன்தினம் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது விக்கெட் எடுத்ததும், புஷ்பா திரைப்பட ஸ்டைலில் கொண்டாடியதை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி வரவேற்றனர். இது குறித்து வனிந்து ஹசரங்கா கூறும்போது, ‘‘நான் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை விரும்பிப் பார்ப்பேன். புஷ்பா திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படமாகும். அதனால்தான் விக்கெட்களை வீழ்த்தியபோது ‘புஷ்பா’ பட பாணியில் கொண்டாடினேன்’’...
ஆடு​களத்​துக்​குள் எந்த ஓவரில் விளை​யாட வரு​வது என்ற முடிவை எம்​.எஸ்.தோனி மட்​டுமே எடுக்​கிறார் என்று சிஎஸ்கே அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்​கம் அளித்​துள்​ளார். குவாஹாட்​டி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் சிஎஸ்கே அணி 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. சிஎஸ்கே அணி​யின் மிகச்​சிறந்த ஃபினிஷர் என்று பெயரெடுத்த எம்​.எஸ். தோனி, இந்த ஆட்​டத்​தில் 11 பந்​துகளில் 16 ரன்​கள்...
ஐபிஎல் போட்டிகளில் ஜாம்பவான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதிக கோப்பையைக் கைப்பற்றிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸும் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸும். இரு அணிகளுமே தலா 5 முறை கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தவை. ஆனால் இந்த சீசனின் தொடக்கம் முதல் 2 அணிகளுமே போதுமான திறனை வெளிப்படுத்தவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டது. அதேநேரத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா ரைடர்ஸ் அணி முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்திருந்தது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில்...
டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தகுதி சுற்றுடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 600 புள்ளிகள் வழங்கப்படும் இந்த தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.2.35 கோடியாகும். ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றில் தமிழகத்தின் முதல் நிலை வீரரான அபினந்துக்கு முதல் ஆட்டத்தில் ‘பை'...