இந்​தி​யா​வுக்கு எதி​ரான 3-வது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 41 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. நியூஸிலாந்து வீரர்​கள் டேரில் மிட்​செல், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் சதம் விளாசி அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். மேலும் ஒரு​நாள் தொடரை​யும் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் கைப்பற்றியது. நியூஸிலாந்து அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர், 5 சர்​வ​தேச டி20...
நேற்​றைய போட்​டி​யில் 137 ரன்கள் விளாசி​யதன் மூலம் இந்தியாவுக்கு எதி​ராக 4-வது ஒரு​நாள் போட்டி சதத்தை டேரில் மிட்​செல் எடுத்து சாதனை படைத்​துள்​ளார். மேலும் கடந்த 4 போட்டிகளில் அவர் விளாசும் 3-வது சதமாகும் இது. ஒட்டுமொத்தமாக ஒரு​நாள் போட்​டிகளில் அவர் எடுக்கும் 9-வது சதமாகும் இது. இந்​திய மைதானங்​களில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக 7 போட்டிகளில் விளை​யாடி​யுள்ள டேரில் மிட்​செல் 4 சதங்களை எடுத்​துள்​ளார். இந்த வரிசை​யில் தென் ஆப்பிரிக்க...
ஹாக்கி இந்தியா லீக் தொடரில் நேற்று ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கேப்டன் ஜக்ராஜ் சிங் 3 கோல்கள் (11, 43 மற்றும் 45-வது நிமிடங்கள் அடித்து அசத்தினார். சுக்ஜித்சிங் (18-வது நிமிடம்), அபிஷேக் (55- வது நிமிடம்)...
ஆண்​டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்​டி​யான ஆஸ்​திரேலிய ஓபன் டென்​னிஸ் வரும் 18-ம் தேதி ஆஸ்​திரேலி​யா​வின் மெல்​பர்ன் நகரில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த போட்​டிக்​கான வீரர், வீராங்​க​னை​களின் தரவரிசை நேற்று அறிவிக்​கப்​பட்​டது. ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸுக்கு முதலிடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. 2 முறை சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னருக்கு 2-வது இடமும் ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவுக்கு 3-வது இடமும், 10 முறை சாம்​பிய​னான செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச்​சுக்கு...
ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி பேட்​ஸ்​மேன்​களுக்​கான தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​திய அணி​யின் சீனியர் நட்​சத்​திர பேட்​ஸ்​மே​னான விராட் கோலி முதலிடத்​துக்கு முன்​னேறி உள்​ளார். வதோத​ரா​வில் நியூஸிலாந்​துக்கு எதி​ராக நடை​பெற்ற முதல் ஒரு​நாள் போட்​டி​யில் 93 ரன்​களை விளாசி​யதன் மூலம் 37 வயதான விராட் கோலி, தரவரிசை​யில் 785 புள்​ளி​களு​டன் ஓர் இடம் முன்​னேறி முதலிடத்தை பிடித்​துள்​ளார். கடைசி​யாக விராட் கோலி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை​யில் முதலிடத்​தில் இருந்​தார்....
இந்​தியா ஓபன் பாட்​மிண்​டன் தொடர் டெல்​லி​யில் உள்ள இந்​திரா காந்தி விளை​யாட்டு வளாகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 32-வது வயதான இந்​திய வீர​ரான கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்​டைச் சேர்ந்த எம்​.தருணை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் ஸ்ரீகாந்த் 15-21, 21-6, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​றார். அதேவேளை​யில் அனுபவம் வாய்ந்த ஹெச்​.எஸ்​.பிர​னாய், கடந்த ஆண்டு 2-வது இடம்...
ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் ஜிம்​பாப்வே மற்​றும் நமீபி​யா​வில் இன்று (15-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் பிப்​ர​வரி 6-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 16 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இவை 4 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​தியா யு-19 அணி ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் அமெரிக்​கா, வங்​கதேசம், நியூஸிலாந்து அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. 5 முறை சாம்​பிய​னான இந்​தியா யு-19 அணி...
ஐசிசி பந்து வீச்சு ஆக்‌ஷன் அடிப்படையில் ஒழித்த பவுலர்களில் மே.இ.தீவுகளின் ஜெர்மைன் லாசன் உண்மையில் பரிதாபத்துக்குரியவர். பாகிஸ்தானின் சயீத் அஜ்மலை அனைத்து அணி முன்னணி வீரர்களும் ஆடத் திணறிக்கொண்டிருந்த போது அவர் ஆக்‌ஷன் மீது ஐயத்தைக் கிளப்பி அவரை சோதனைக்கூடத்திற்கு அனுப்பி, அவர் மீண்டும் ஆக்‌ஷனை சரி செய்த பிறகு வீசும்போது ஒன்றுமில்லாமல் போனார். அதே கதைதான் ஜெர்மைன் லாசனுக்கும் நடந்தது. 1982ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதியான...
கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது இறங்க வேண்டிய தேவை இருந்தும் அவர் இறங்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது எனும்போதும் காயத்தினால் ஷுப்மன் கில் இறங்க மறுத்தார், ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தரை இறக்கி அவரது டி20 உலகக்கோப்பை வாய்ப்பையே இப்போது கேள்விக்குட்படுத்தியுள்ளனர் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் காட்டமாக சாடியுள்ளார். வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 301 ரன்கள்...
 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வங்கதேச கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து விவாதிக்க, வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் காணொலிக்...