இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடருடன் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அறிவித்து உள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடருடன் அனைத்து...
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆட்டத்தில்...
‘நான் களமிறங்குவதற்காக எனக்கு முன்னால் விழும் விக்கெட்டை கொண்டாடுவதா?’ – விராட் கோலி வருத்தம்
admin - 0
முன்பெல்லாம் கபில்தேவ் இறங்க வேண்டும், சச்சின் டெண்டுல்கர் இறங்க வேண்டும், தோனி இறங்க வேண்டும் என்றால், அதற்கு முன்பாக அவுட் ஆகிச் செல்லும் வீரரின் விக்கெட்டை ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். இப்போது விராட் கோலியைப் பார்ப்பதற்காக இக்கால ரசிகர்களிடத்திலும் இதே பழக்கம் தொற்றிக் கொண்டுள்ளதை விராட் கோலி மன வருத்தத்துடன் கண்டித்துள்ளார்.
நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 9-வது ஓவரில் அவுட்...
யோனக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் இன்று (13-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி நடைபெறும் இந்த போட்டி பிடபிள்யூஎஃப் உலக டூர் சூப்பர் தொடரின் 750 புள்ளிகளை கொண்டதாகும். வரும் ஆகஸ்ட் மாதம் இதே மைதானத்தில் பிடபிள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் நடைபெறுகிறது. இதனால் தற்போது நடைபெறும் இந்தியா ஓபன் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
6 நாட்கள்...
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் நேற்று பெங்களூருவில் கர்நாடகா - மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 91 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார். கேப்டன் சிதேஷ் லாடு 38, சாய்ராஜ் பாட்டீல் 33, அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 ரன்கள்...
விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் எஞ்சிய 2 ஆட்டங்களில் இருந்து விலகி உள்ளார் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய 26 வயதான இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 5 ஓவர்களை வீசி 27 ரன்களை வழங்கினார். அப்போது திடீரென...
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி 20 ஆட்டம் நேற்று முன்தினம் இரவு தம்புலாவில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 12 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. கேப்டன் தசன் ஷனகா 9 பந்துகளில், 5 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் விளாசினார். குஷால் மெண்டிஸ் 30, ஜனித் லியனகே...
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 25 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 28 ஆயிரம் ரன்களை எட்டினார். இதன் மூலம் 28 ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
இந்த மைல் கல் சாதனையை அவர், தனது 624-வது இன்னிங்ஸில் கடந்துள்ளார். இந்த வகையில் இதற்கு...
இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியையொட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அவர், வயிற்று பகுதியின் பக்கவாட்டில் அசவுகரியத்தை உணர்ந்தார். இதையடுத்து அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிசிசிஐ மருத்துவக்குழு, நிபுணருடன் ஆலோசனை நடத்தியது. இதில் ரிஷப்...
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் பிரிஸ்பன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் நேற்று முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்குடன் பலப்பரீட்சை நடத்தினார்.
ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை...