மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்​பர் கிங்​ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணி​களும் இணைந்து மொத்​தம் 13 ஐபிஎல் பட்​டங்​களை வென்றுள்ளன. இருப்​பினும், கடந்த சீசன் இந்த அணி​களுக்கு கடும் போராட்​ட​மாகவே அமைந்​தது. கடந்த முறை பிளே-ஆஃப் சுற்று வரை மும்பை அணி சென்றாலும், அவர்​களின் முழுத் திறனும் வெளிப்படவில்லை. 5 முறை சாம்​பியன் என்ற அடிப்படையில் இம்​முறை மும்பை அணி கம்​பீர​மான ஆட்டத்தை வெளிப்​படுத்துவதில் முனைப்பு காட்​டக்​கூடும். கடந்த...
ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சமீபத்தில் சாதனை தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வணிகத்தில் ‘முதலீட்டுக் குமிழி’ எனும் அபாயம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ‘இன்வெஸ்ட்மெண்ட் பபுள்’ அல்லது ‘முதலீட்டுக் குமிழி’ என்பது பொருளாதார நிபுணர்களால் அபாயகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு இரு பேருதாரணங்களாக அவர்கள் சுட்டிக்காட்டுவது அமெரிக்க 1929 பங்குச் சந்தை சரிவு அதன் பிறகான தி கிரேட் டிப்ரஷன் என்பதற்கு பிரதான...
3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) கடந்த சீசனில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் காயம் அணிக்கு பெரிய அளவில் பின்னடவை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், பலரும் கவனிக்கத் தவறிய ஒரு விஷயம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் பட்டத்தை வென்ற அதே அணியின் முக்கிய வீரர்கள் இப்போதும் அணியில் நீடிக்கின்றனர். அதோடு, கடந்த ஆண்டு அணியில் இல்லாத...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 21 முதல் 25 வரை நாக்பூரில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், 3-வது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் பிப்ரவரி 11 முதல் 15 வரையிலும், 4-வது...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு சபாநாயகர் அறிவுறுத்தி உள்ளார். ஐபிஎல் டிக்கெட் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது பல்வேறு கட்சிகளை சேர்ந்த கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த சூழலில் அம்மாநில சபாநாயகரான யு.டி.காதர் இதை...
நடப்பு ஐபிஎல் சீசன் நாளை (மார்ச் 28) தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் முழு ஆட்ட அட்டவணை குறித்து பார்ப்போம். இந்த சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இளம் வீரர்களுடன் இணைந்து அனுபவமிக்க வீரர்கள் சிஎஸ்கே அணிக்காக இந்த...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை அவரது ஒவ்வொரு பட ரீலீசின் போதும் பெரிதாகப் பேசி வந்துள்ளது தமிழ்ச்சமூகம். அதே போல்தான் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடக்கத்தின் போதும் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என்பார்கள் ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் போய் விடுவார், மீண்டும் அடுத்த சீசன்.. இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது. இந்த முறை சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வந்த...
வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது: “தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (2011) வென்று கொடுத்தவர் தோனி. எனது தலைமையிலான அணி, அதே தொடரில் (2003) இரண்டாம் இடம் பிடித்தது. இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அணியை அவர்...
நியூஸிலாந்து - தென் ஆப்​பிரிக்கா அணிகள் இடையி​லான கடைசி மற்​றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்​சர்ச்​சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கானர் எஸ்​டர்​ஹுய்​சன் 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​கள் விளாசி​னார். ரூபின் ஹெர்​மான் 39, வியான் முல்​டர் 39, தியான் பாரஸ்​டர்...
ஆசிய கோப்பை உலக ரேங்​கிங் வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரிவு அரை இறுதியில் சிக்​கதா தனி​பார்த்​தி, ராஜ் கவுர், தேஜல் சால்வே ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 229-226 என்ற கணக்​கில் தாய்​லாந்து அணியை வீழ்த்​தி​யது. இறு​திப் போட்​டி​யில் இந்​திய மகளிர் அணி​யானது போட்டித் தரவரிசை​யில் 3-வது இடத்​தில் உள்ள கஜகஸ்​தான்...