பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
admin - 0
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 128 ரன்கள் இலக்கை...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 3 ஆயிரம் ரன்கள் குவித்து இஷான் கிஷன் சாதனை புரிந்தார்.
2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் நேற்று தொடங்கியது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியும், 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசரிஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201...
ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 14 ஆண்டுகால நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக...
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று மோதவுள்ளது. எம்.எஸ்.தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு இது முதல் ஆட்டமாக அமையவுள்ளது. கடந்த சீசனில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தாத நிலையில் இந்த ஆண்டில் புதிய வீரர்களுடன் மிகுந்த...
எனது கடின உழைப்பு, தீவிர பயிற்சியே வெற்றிக்குக் காரணம் என்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்தார்.
ஐபிஎல் சீசனின் தொடக்க ஆட்டம் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி கண்டது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பெங்களூரு...
நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று (மார்ச் 30) முதல் லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்நிலையில், தங்கள் அணியை கேப்டனாக வழிநடத்த ரியான் பராக் சரியான தேர்வு என ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன், இந்த சீசனுக்கு முன்னதாக டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றார். இந்த சூழலில் அணியின்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இம்முறை அனுபவம் இல்லாத ரியான் பராக் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சீசனிலும் பெரும்பாலான போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக இருந்தார். அந்த சீசனில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் இறுதி ஓவர்களில் தோல்வியை சந்தித்து இருந்தது.
இது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை வெகுவாக பாதித்தது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட ரியான் பராக் முயற்சி செய்யக்கூடும். ரவீந்திர ஜடேஜா, டொனோவன் பெரைரா...
மார்ச் 27, 2016, டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் கிளாசிக் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்ப இந்திய அணி அரையிறுதியில் நுழைந்தது. இன்றைய தினத்தில் அந்த கோலி கிளாசிக் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது.
இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஏரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ்...
பாகிஸ்தான் சூப்பர் லீக் என்றாலே சர்ச்சைகளின் லீக் என்றாகிவிட்டது. நேற்று முதல் போட்டியிலேயே வெள்ளைப்பந்து பிங்க் நிறப் பந்தாக மாறிய விவகாரம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
லாகூர் குவாலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதிய போட்டியில், சாதாரணமாக வெள்ளையாக இருக்கும் கிரிக்கெட் பந்து, ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே பிங்க் நிறமாக மாறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்ததோடு ஆஸ்திரேலிய பேட்டர் மார்னஸ் லபுஷேனுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் அணிக்காக விளையாடிய...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 19-வது சீசன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, தலா...









