மாநிலங்களுக்கு இடையேயான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகம் 11 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் 195 புள்ளிகளை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. மேலும் ஆடவர் பிரிவில் 101 புள்ளிகளையும், மகளிர் பிரிவில் 90 புள்ளிகளையும் பெற்று அணிகள் பிரிவில் முதலிடம் பிடித்தது.
400 மீட்டர்...
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டிராப் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா இறுதிப் போட்டியில் 43 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். கத்தாரின் பாஸில் ரே 37 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் ஆஷிமா அஹ்லாவத் 29 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிருக்கான டிராப் அணிகள் பிரிவில் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத், பிரீத்தி ரஜக் ஆகியோரை...
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் 19 வயதான அமெரிக்காவின் லர்னர் டியனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர்...
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி இறுதிப் போட்டியில் 53 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான யஷஸ்வி ரத்தோர் 52 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கஜகஸ்தானின் லிடியா பஷரேவா 40 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான ஜூனியர்...
64-வது மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 45.12 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன்னர் முகமது அனாஸ் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தய...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் இந்திய பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே.
37 வயதான ரஹானே 201 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் மும்பை அணியில் பேட்ஸ்மேனாக தொடர்வேன் எனவும் ரஹானே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஹானே தனது எக்ஸ் வலைதள பதிவில், “மும்பை அணியின்...
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்டு கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரேசிலின் சாமுவேல் சேவியனுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 44-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் 46-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. அமெரிக்காவின் பேபியானோ...
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்கே நகரில் இன்று நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றன. கெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற முதல்...
சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிடம் தோல்வி அடைந்த உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் நேற்று 2-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ கருனா மோதிய ஆட்டம் 37-வது நகர்த்தலின் போது டிராவில்...
கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.
ஆடவருக்கான ஸ்கீட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனந்த் ஜீத் நருகா 57-56 என்ற கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான குவைத்தின் மன்சூர் அல் ரஷிதியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி 17-9 என்ற கணக்கில் சீன தைபேவின் லியு...










